பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1 1

24.2

ஈழமுங் கொங்குங் கயவேட்டை யாடி யிசை பெருக வாழுமெஞ் சேது பதிராச ராச மதன் வரையீர் தாழுநல் லேழைய ராயினு நீரோ தனமளித்தீர் மாழை வடுவு மளித்தாலன் றே சுவை வாய்ப்பதுவே.

ஈழம் - ஈழநாடு, இலங்கை; கொங்கு - கொங்குநாடு, கயவேட்டை - யானை வேட்டை; இசை - புகழ், மதன் - மன்மதன், நீரோதனம் . நீர்விட்ட பழஞ்சோறு, மாழைவடு - மாவடு; தாழ்ந்த நிலையில் வறுமை யுடைய ராயினும் நீர் கலந்த பழஞ்சோற்றைத் தந்தீர்; மாவடு ஊறுகாயும் அளித்தாலல்லவா சுவை பயக்கும் என்பது வெளிப்படை, தாழும் நல் ஏழையர் ஆயினும் - கூந்தல் தாழும் நல்ல பெண்களாயினும்; நீரோ தன மளித்தீர் - நீர் முலைகளைத் தந்தீர்; மாவடுவும் அளித்தால் மாவடு போன்ற உம் கண்ணையும் அளித்தால், சுவை வாய்ப்பது - இன்பம் கிட்டுவது. -

24B

கள்ளமி லாதரா சாராம பாண்டிய காமன் முன்னேன் வள்ளன்மை மிக்கவன் சீராச ராசன் மலையனையாய் உள்ள மிளகா யெனாகிற்பை சிந்தக முன் கையுண்டால் ஒள்ளிய வின்புளி வேண்டெற் குவரை யுத வலென்னே.

கள்ளம் - வஞ்சனை, குற்றம்; ராசாராமபாண்டியன் - இராசராச சேதுபதியின் தம்பி; முன்னோன் - தமையன், வள்ளன்மை மிக்கவன் - கொடைத்தன்மையால் சிறப்புற்றவன்; உள்ளம் மிளகாய் என நிற்பை உள்ளத்தால் மிளகாய் போலக் கடுமையாய் நிற்பை; சிந்தகம் உன்கை உண்டால் - புளி உன்கையிடத்தே உண்டு; உவர் - உவர்ப்பு, உப்பு: நன்றாகச் சமைத்த இனிய புளிக்குழம்பை விரும்புகிற எனக்கு உப்பைத் தருவது ஏன் ஏன்பது வெளிப்படை. உள்ளம் இளகாய் என நிற்பை - மனம் இரங்குவாய் எனக் கேட்கவும் ஒன்றும் பேசாது நிற்கிறாய் , சிந்தகம் - கடல், கடல் போன்ற கண்கள். ஒள்ளிய இன்பு உளி வேண்டு எற்கு - சிறந்த இன்பத்தை எண்ணி வேண்டிய எனக்கு; வரை உதவல் என்னே - மலைபோன்ற முலைகளை மட்டும் தருதலால் என்ன பயன்,

244 பொங்குசர் தானங் தழைராச ராசன் புவியிற்றன் மக் தங்குசங் காழித் தநுக்கோடி காவலன் றள் வரைவாப் இங்குசம் போகம் விழைவேன் மனமா மிபமறுக வங்குசம் விட்டுவில் லம்புகைப் பற்றலென் ரைணங்கே.