பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(104 - "அன்புள்ள இளவரசனுக்கு ** - - - பழுது பட்டுவிட்டது என்றுதான் கருதவேண்டுமே தவிரப் பிறிதொன்றும் எண்ணுதற்கில்லை. இந்த நாட்டிலே வேறு மொழி ஆதிக்கம் செலுத்த வேண்டு மென்பது தான் குறுகிய நோக்கமும் கெட் நோக்கமும் ஆகும். நாம் வேறொரு நாட்டிலே சென்று தமிழ் மொழி தான் ஆட்சி செலுத்த வேண்டு மென்று கூறினால் அது தவறு: குறுகிய நோக்கமும் ஆகும். நாம் நம்முடைய நாட்டிலே நம் மொழி வாழ, வளர, வளம் பெற, ஆள விரும்பு கிறோம். இது தவறென் றோ குறுகிய நோக்க மென்றோ அறிவுடைய எவருமே சொல்லார். ஆங்கிலம், வடமொழி, இந்தி முதலிய எத்தனை மொழிகளின் படையெடுப்பு இங்கு ? நம் செல்வம், உழைப்பு, நேரம் அத்தனையும் பிற மொழிகளுக்கே செலவிட்டால் நம் தாய் மொழியை வளர்ப்பவர் யார் ? தாய்ப்பால் நிறைய இருக்கும் பொழுது அதை விடுத்துக் குழந்தைக் குப் புட்டிப் பாலை ஏ ன் புகட்ட வேண்டும் ? நாகரீகமற்ற இனத்தவர் என்று சொல்லப்படும் நாகர்களிடம் காணப்படும் மொழிப் பற்றி ல் ஒரளவாவது நம்மிடம் இருக்க வேண்டாவா ? உன் தந்தை, முடியரசன்