பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் - அவமதிப்பது தேசியத் தற்கொலையாகும்” என்று கூறியருளியிருக்கிறார். தாகூர், பிரமசமாசத்திற் சேர்ந்து மத வேற்றுமை 4ளினால் ஏற்படும் தீங்குகளை ஒழிக்கத் தாய்மொழியில் கணக்கில்லாச் சொற்பொழிவுகள் செய்துள்ளார். மாநிலக் கூட்டங்களிலெல்லாம் தாய்மொழியிலேயே எல்லாச் சொற் பொழிவுகளும் செயல் நிருவாக முறைகளும் நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தினார். இது குறுகிய நோக்கமா? மேலும், தாகூர், உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி என்ற நூலைத் நம் தாய்மொழியாகிய வங்க மொழியிற்றான் முதன் முதலில் ாழுதினார். திலகர் கீதா ரகசியம் என்ற நூல்ைத் தம் தாய்மொழியாகிய மராட்டிய மொழியிலேயே ஆக்கினார். இவர்களையெல்லாம் குறுகிய நோக்கமுடையவf #ன்று ' கூறிவிட முடியுமா? பாரதி, சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! ான்றானே அவனுமா குறுகிய நோக்கமுடையவன் ? நாம் பிற மொழிகளைப் பயில வேண்டா என்றா கூறுகிறோம் ? எந்த மொழி கற்றாலும் எத்தனை மொழி பயின்றாலும் தாய்மொழியை, தமிழ் மொழியை மறந்து விடாதீர்கள் என்று தானே எடுத்துச் சொல்கிறோம். 'தமிழ் மொழி வரலாறு'என்ற நூலைப் படித்துப்பார். ாழுதியவர் சூரிய நாராயண சாத்திரியார், நடுவுநிலை பிறழாமல் எழுதுகிறார். மேலும் தம் பெயரைப்பரிதிமாற் கலைஞன் என மாற்றி வைத்துக் கொண்டார். அவர் ாழுதுவதையும் பெயர் மாற்றத்தையும் கண்டு அவரைக் குறுகிய மனப்பான்மையினர் என்று கூறுவதா? கூறுவார்மதி f