பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് 102 T அன்புள்ள இளவரசனுக்கு. - - - - - அத்தகைய நோக்கமுடையவர்தாம். அடிகளுக்கு ஆங்கிலம் தெரியும். இந்தியாவின் பொது மொழி இந்தி யென்று கூறுபவருங்கூட, ஆனால் அவர் தமது வரலாற்றை ஆங்கிலத் திலோ இந்தியிலோ எழுதினாரல்லர். தம் தாய் மொழி யாகிய கூர்ச்சர மொழியிற்றான் எழுதினார். இது குறுகிய நோக்கமா ? அன்றிப்பிற மொழியின் பாற் கொண்ட வெறுப்பா ? அன்று. தாய்மொழிப்பற்று. மயிலாடுதுறைக்கு நம் காந்தியடிகள் ஒருமுறை வந்திருந்தார். அவ்வூர் மக்கள் அப்பெருந்தகைக்கு வரவேற்பிதழ் ஒன்று நல்கினர். அதற்குக் காந்தியடிகள் மறுமொழி பகரும்பொழுது, வரவேற்பு ஆங்கில மொழியில் பொறிக்கப் பட்டிருத்தல் காண் கிறேன்... நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று, அவற்றின் சமாதியின் மீது ஆங்கிலத்தை நி ல வ ச் செய் வீர்களாயி ன், நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாக மாட்டிர்கள் என்று சொல்லுவேன். எனக்குத் தமிழ் மொழி தெரியா தென்று நீங்கள் உணர்ந்தால் அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும், அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கை அளித்து, அதை மொழி பெயர்த்து உணர்த்தியிருப்பீர்களாயின் உங்கள் கடனை ஒரு வாறு ஆற்றின் வர்களா வீர்கள்” என்று கூறியிருக்கிறார். மற்றோரிடத்தில் “தாய் மொழியின் வழிப் பிள்ளை கட்குக் கல்வி பயிற்றல் மிக முக்கியமானது. தாய்மொழியை