பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரச குன் மொழித்துறையில் விரிந்த மனப்பான்மை பேசுவது தவறான வழியென்று தெரிகிறது. பேச்சு வழக்கற்ற வடமொழி பொது மொழியாக வேண்டுமென்று சொல்லும் ஆணவத்தைப் பார்த்த பின்னரும், பலப்பல படையெடுப் "பாலும் அழிக்கப்படாத சமயத்தின் பேரால் நீரிலும் நெருப்பிலும் இட்டும் சாவாத-உயர் தனிச் செம்மொழி யென்று வேற்று நாட்டினராற் புகழப்பட்ட தமிழ்மொழியைப் பொது மொழியாக்க வேண்டு மென்று நாம் கூறா விட்டாலும், தமிழகத்திலேனும் உலவ விடுங்கள் என வேண்டினால் இது குறுகிய மனப்பான்மையா ? நெஞ்சம் என்று ஒன்று அவர்களுக்கு இருக்குமானால், சிந்திக்கும் ஆற்றல் சிறிதேனும் இருப்பது உண்மையானால், நேர்மை, உண்மை, நடுவுநிலைமை என்பனவற்றை ஒரளவேனும் உணரும் நிலைமையைப் பெற்றிருப்பார்களானால் நம் உரிமையுணர்வைக் குறுகிய மனப்பான்மையெனக் கூறார். அந்தோ! நம் தாய் மொழிக்கு இப்படி ஒர் இடையூறா வரவேண்டும் ? ஆட்சியில், நம் இல்லத்துச் சடங்குகளில், வழிபாடுகளில், கல்வியில் இப்படி எல்லாத் துறைகளிலுமா பிறமொழியாட்சி செலுத்த வேண்டும் ? அத்துறைகளி லெல்லாம் அயன் மொழியாட்சி களையப்பட்டுத் தமிழ் ஆள வேண்டும் என்றால் இத்தகைய எதிர்ப்பா ? துறை தோறும் துறைதோறும் தமிழ் படும் பாட்டை நினைத்தால் நெஞ்சங்குமுறுகிறதே! பொறுமையை மீறத் தோன்றுகிறதே! தமிழன் என்ற பெயரளவிற்றானே திரிகிறோம் நாம் ! உணர்ச்சியற்ற, நடைப் பிணங்களாகி விட்டோமே! தாய்மொழி வாழவேண்டுமென்று சொல்வதைக் குறுகிய நோக்க மென்று சொன்னால் காந்தியடிகளும்