பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அன்புள்ள இளவரசனுக்கு ... -- - சாதுவன் என்பான் ஒரு வணிகன், காவிரிப் பூம்பட்டினத்தி லிருந்து வெளிநாட்டிற்குச் சென்று பொருள் தேடக் கடல் கடந்து செல்லும் இயல்பு உடையவன். வழக்கப்படி ஒருநாள் கடல் கடந்து செல்லும் இயல்பு உடையவன். வழக்கப்படி ஒருநாள் கடல் கடந்து சென்றான். சென்று நிறைந்த பொருள் ஈட்டி மீண் டான். மீளுங் கால் பெரும் புயலால் அவன் வந்த மரக்கலம் சிதறுண்டு கடலுள் மூழ்கியது. அவன் மூழ்கித் த விக் கையில் உடைந்த மரத்துண் டொன்று அவன் கைக்குக் கிட்டியது. அதனைப் பற்றிக் கொண்டே மிதந்து சென்று, அலை ஒதுக்கிய பக்கம் ஒரு கரையை அடைந்தான் கரையேறியதும் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் படுத்து விட்டான். சாதுவன் கரையேறிய பகுதி நாகர்கள் வாழும் மலைப் பகுதி, அவர்கள் ஆடையின்றி வாழ்பவர்கள், கல்வியறிவற்றவர்கள்; நாகரிகம் அற்றவர்கள்; முரடர்கள்; தன் மனை, பிறர் மனை என்று வேறுபாடறியாதவர்கள்; மனிதனை க் கொன்று தி ன்னும் மாண் புடையவர்கள். தமிழல்லாத பிறமொழி பேசுபவர்கள். சாதுவன் கிடந்த மரத்த ருகே நாகர் சிலர் வந்தனர். படுத் திருக்கும் சாதுவனைக் கண்டதும் நாகர்கள், தமக்குப் பேருணவு கிடைத்த தென்று பெருமகிழ்வு கொண்டனர். அவனை எழுப்பினர். எழுந்ததும், அவர்கள் குறிப்பை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்ட சாதுவன், தனக்கேற்பட்ட இன்னல்களை யெல்லாம் அவர்கள் பேசும் மொழியிலேயே எடுத்துச் சொன் னான். தங்கள் மொழியிலே பேசிய சாதுவனிடம் நாகர்கள் இரக்கங் கொண்டு சாதுவனைக் கொல்லாது தம் தலைவனிடம் அழைத்துச் சென்றனர்.