பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தி முழுதும் அறிந்த நாகர் தலைவன், மகிழ்ந்து, சில நாள் தங்குமாறு சாதுவனை வேண்ட, அவனும் தங்கினன், அப்பொழுது சாதுவன் நாகர் தலைவனுக்குச் சில அறிவுரைகளை எடுத்தோதினான். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அத்தலைவன், முன்னர்க் கொள்ளை யடித்து வைத்திருந்த செல்வங்களில் மிகுதியும் தந்து, அவனைக் காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செலவிடுத்தனன். இதுதான் மணிமேகலைத்தருஞ் செய்தியாகும். /r இதிலிருந்து நீ என்ன தெரிந்து கொள்கிறாய்? நாகரிகமற்ற நாகர்கள் சாதுவனைக் கொல்லாது விடுத்ததும், இரக்கம் காட்டியதும் அத்தலைவன் சாதுவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துப் பாராட்டியதும் ஏன் ? நாகர்கள் பேசும் மொழியில், சாதுவன் பேசினான் என்ற ஒரே காரணத்தினாலேதான். இம் மொழிப் பற்று அவர்களுக்கு இயல்பாக வாய்த்த ஒன்று. காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த அவர்களுக்கிருந்த மொழிப் பற்று நமக்கில்லையே! நாமென்ன அவரினும் இழிந்தவர்களா ? இத்தகைய காட்டு மிராண்டித்தனம் நம்மிடம் இருந்தால் ாவ்வளவோ மேல். ஆனால் நாம் காட்டுமிராண்டிகள் அல்லோம். காட்டுமிராண்டிகளுக்கு நாகரிகம் இதுவென்று கற்றுக் கொடுத்த பேரினத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பேரினத்தின் வழித் தோன்றல்கள் நாம் என்று வாயாரப் பேசுவோம். ஆனால் அப்பேரினத்தின் பெயருக்கு மாசு உண்டாகும் வகையில் நடந்துகொள்கிறோமே! தாய் மொழியை மறந்து, தமிழ்நாட்டிற் கண்டகண்ட மொழி களுக்குக் கதவு திறந்து விடுகிறோம்; வரவேற்பும் கூறுகிறோம். இவ்வழக்கம் தகாதது என்போரை வசை