பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- T- - -T | 108 -அன்புள்ள இளவரசனுக்கு ... மாரி பொழி கின்றோம். இத்தகைய அறியாமையை என்னென்பது ? தம்பி, நீ இதைப் படித்தவுடன், சாதுவன்’ தமிழன் தானே அவன் நாகர் மொழியைத் தெரிந்திருக்கிறானே ! அது போல நாமும் பிறமொழி களைப் பயின்று கொள்வது நன்மைதானே ? பிற மொழிகளைப் பயிலக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் ? என்றெல்லாம் அய்யுறலாம். அதுவும் சரியான அய்யமே. அவன் தமிழன் தான். ஆனால் அவன்தரின் தாய் மொழி யைப் புறக் கணித்து விட்டுப் பிற மொழியைப் பயின்றான் என்று சொல்லப் படவில்லையே மேலும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தி அத்தனைப் பேரும் நாகர் மொழியைப் பயின்றார் என்றும் கூறப்படவில்லையே! சாதுவனை ப் போல வெளிநாடு செல்லும் நிலையில் இருந்தவர்கள், வாணிகத்தின் பொருட்டும் பிறபொருட்டும் ஏனைய மொழிகளைத் தாமே விரும்பிக் கற்றுக் கொண்டன மே யன்றி வேறொன்றில்லை. நாகர்கள் சாதுவன் மீதோ சாதுவன் வாழ்ந்தநாட்டின் மீதோ கட்டாயமாகத் திணிக்கவில்லையே அம் மொழியை தனி மனிதன் தன் தேவைக்கு எத்தனை மொழி வேண்டு மானாலும் பயிலலாம். எனினும் தன் தாய் மொழியை மறந்துவிடுதல் கூடாது. "ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயன் மொழியைப் கற்கையிலும் எந்த நாளும் திங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராக் கொள்வீர்”