பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன் - 109 | என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடலால் தமிழகத்தின் மொழிக் கொள்கையைத் தெளிவுபடத் தெரிந்து கொள்கிறோம். தாய் மொழியைப் புறக்கணித்து விட்டுப் பிறவற்றிற்கு ஆக்கந் தேடுதல் தகாது என்றுதான் சொல்கிறேன். தமிழ் ஆட்சி மொழியாதல் வேண்டும்; தமிழர் நூற்றுக்கு எண்பது பேராவது தமிழ் கற்றவராதல் வேண்டும். அதன் பின்னர் அவரவர் தகுதிக்கேற்ப, தேவைக்கேற்ப, விருப்பிற் கேற்ப எத்தனை அயன் மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய சூழ்நிலையை அரசியலார் ஆக்கித் தருதல் வேண்டும். அதை விடுத்து நூற்றுக்கு எண்பத்தேழு பேர் கல்வியறிவில்லாத நாட்டில், இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று ஒரு சமுதாயத்தின் தலையில் சுமத்துவதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ? நீயே 1சால் இந்த நிலைதான் கூடாதென்று சொல்கிறேன். பிற மொழிகளே கூடாதென்று கூறவில்லை, தமிழறியாத, தமிழுணர்வே இல்லாத இந்த நிலையிற் பிறமொழிக் கற்பது கூடாதென்று சொல்கிறேன். அவ்வளவுதான். சாதுவன் இருக்கட்டும், அவனைப் பற்றிக் காப்பியந் தானே கூறுகிறது. குமரகுருபரர் என்ற துறவியைப் பற்றிக் கூறுவேன் கேள் நீதி நெறி விளக்கம் முதலான பல ால்களை ஆக்கியவர் குமரகுரு பரர். அவர் ஒரு கால் வடநாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் ஒரு செயலை முடித்துக் கொள்வதற்காக அரசன் உதவியை நாடவேண்டிய நிலை இருந்தது. அரசனுக்குத் தமிழ் தெரியாது; குமரகுருபரருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அரசனோடு அவன் மொழியிலேயே உரையாடினால், தம் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என