பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

দিs_ - -அன்புள்ள இளவரசனுக்கு. கருதுகிறேன். “புரிந்தமொழி புரியாதமொழி என்றெல்லாம் கூறுவது தவறு. தந்து-புதிகதமெகழி-என்றெல்லாம்-சு-துவது தது. நேற்று புரியாதது இன்று புரியும்; இன்று புரியாதது நாளை புரியும்; எனக்குப் புரியாதது என் மகனுக்குப் புரிகிறது. எனக்கு "லைட் ஹவுஸ் புரியும்; என் மகனுக்குக் கலங்கரை விளக்கம் புரிகிறது. ஆகவே புரிந்த மொழி புரியாத மொழி என்பது மொழியின் குற்றமன்று; அதைப் புரிந்து கொள்ள முயலாமைதான் நம் குற்றம்’ என்று குறிப்பிட்டார். அதனால் நாம் முயன்று பலதடவை சொல்லியும் எழுதியும் வந்தால் எல்லாம் எளிதாகி விடும். தமிழில் எழுதுவது தமிழனுக்குப் புரியவில்லை யென்றால் கண்ணிர் சிந்துவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும் ? தமிழ் இந்த நாட்டிலே இப்படியாயிற்றே என ஏங்குகின்றேன். நான் சொல்வதெல்லாம் நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலானோ கையாண்ட மொழி நடையையா சொல்கிறேன் ? அல்லது சங்கத்து வழங்கிய நடையிலா எழுதக் சொல்லுகிறேன். எல்லார்க்கும் விளங்கக்கூடிய எளிய தமிழ் நடையைத்தானே குறிப்பிடுகிறேன். இவ்வாறு எளிய நடையில் தனித் தமிழில் பேச எழுதப் பயிற்சி பெற்று விட்டால் பின்னர் தானாகவே சங்கத்து நடையில் உரையாசிரியர்கள் எழுதிய நடையில் இன்பங் காண் பாய். அதில் திளைத்து விடுவாய். எளிய நடைதான் வேண்டுமென்று முன்னோர் நடையைத் தள்ளிவிடாதே. அவ் வின் பம் தனியின் பம். தமிழறிவு பெற்று விடின் அது வளர வளர அனைத்து நடையும் இனிமையாகி விடும். உன் அறிவை அளவு கோலாக வைத்துக்கொண்டு சங்கத்து நடையை மதிப்பிடாதே. எள்ளி நகையாடாதே. சங்க நடையை விளங்கிக் Fil TTTil IIIIH - புதுபiH,