உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன் - 15] 'ட்ராங்யூபார் ஆகவில்லையா ? மதுரையை மெஜிரா ான்றனர். அவர்களைப் பின்பற்றி நாமும் நம் மொழி மரபிற்கேற்பச் சொல்லவும் எழுதவும் செய்தோமா ? ஆனால் நம்மொழிப் பண்பை மறந்துவிடுகிறோம். இஃது அடிமை மனப்பான்மையைக் காட்டுகிறதே ஒழிய வேறென்ன ? விடுதலை பெற்றும் நமக்கு அடிமை மனப்பான்மை நீங்கவில்லையே! நீ எழுதும் பொழுது அயன் மொழிச் சொற்களைக் கையாள நேர்ந்தால் நம் ஒலி மரபு கெடாமல் எழுது. எடுத்துக் காட்டாகச் சில தருகிறேன். ஜனவரி' என்று எழுதாதே; சனவரி' என்று எழுது, ஜூன்' என்று எழுதாதே; சூன் என்று எழுது ஆகஸ்ட் என்பதை ஆகத்து என எழுது. செப்டம்பரையும் டிசம்பரையும்'செப்தம்பர். திசம்பர்' என எழுது மேலும் அயன் மொழிச் சொற்களைக் கையாளும் பெரிது அவற்றிற்கேற்ப ஆக்கச் சொற்களைக் கண்டுபிடித் தெழுது. சைக்கிள் என்பதை ஈருருளி அல்லது மிதிவண்டி எனும் சொற்கள்ாற் குறிப்பிடு. இவ்வாறு புதுப் புது ஆக்கச் சொற்களை ஆக்கிக் கொள்வதற்கேற்ற உயர் தனிச் செம்மொழி தான் நம்மொழி. இதனை மொழியறிஞர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக்கச் சொல்லுக்கு அடங்கா தாயின் நம் ஒலி மரபிற்கேற்ப மாற்றி க் கொள்ளுதல் வேண்டும். தனித்தமிழில் எழுதினால் பேசினால் ஒன்றும் அ புரியவில்லையே என்று சிலர் கருதுகின்றனர். பேரறிஞர் அண்ணா அவர்கள், மதுரை எழுத்தாளர் மன்றத்தில் பேசிய கருத்தினை ஈண்டுக்குறிப்பிடுவது நலம் பயக்கும் என்று