பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[114 - -இன்புள்ள இளவரசனுக்கு. சொல் தமிழில் தமிழ் ஒலி மரபிற்கேற்ப வந்து வழங்கு ஞ் சொல். இவ்வாறு வகுத்துக் கொண்டமையால் வடசொல்லும் அஃதொழிந்த பிற திசைச் சொல்லும் தமிழி ல் வந்து வழங்கலாம் என்பது நன்கு புலனாகிறது. இவ்வாறு இடந்தந்து விட்டமையால் வடசொற்களையும் திசைச் சொற்களையுமே முழுதுங் கலந்து பேசவோ எழுதவோ செய்தல் கூடாது. அளவு வேண்டும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சன்றோ ? இவ்வாறு பிற சொற்களைக் கையாளும் பொழுதும் தமிழ் ஒலி மரபிற்கேற்பவே கையாளுதல் வேண்டும். பிற ஒலிகளை அப்படியே கையாள்வது தவறு. இத் துறையில் கம்பர் நமக்கு நல்ல வழி காட்டியாக அமைந்துள்ளார். * லஷ்மணன்' என்ற சொல்லை இலக்குவன் என்றும் ராமன் என்பதை இராமன் என்றும், விபீஷணன் என்பதை வீடனன் என்றும் தமிழ் மரபிற்கேற்பக் கையாண்டுள்ளார். அது பாராட்டுதற்குரியது. அது மட்டுமன்று யக்ஞ சத்ரு' என்னும் வடமொழிச் சொல்லை அப்படியே மொழிபெயர்த்து வேள்விப் பகைஞன் (யக்ஞம்- வேள்வி; சத்ரு-பகைவன்) என அழகான தமிழ்ப் பெயராக் கி விட்டார். நாமும் அவ்வாறே தமிழ் மரபு கெடா மற் பிற சொற்களைக் கையாள வேண்டும். இங்கிலீஷ் என்ற சொல்லை எப்படி வழங்குகிறோம் ? அப்படியே வழங்குவதில்லையே ஆங்கிலம் என அழகியதோர் சொல்லாக்கினர் நம் முன்னோர். அவர் வழி வந்த நாமும் தமிழ்மரபு கெடாமல் நடந்து கொள்ள .ே வ ண் டா வா ? ஆங்கி லேயர் , நம் ஊர்ப் பெயர்களை அவர்தம் ஒலி மரபிற்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லையா ? திருநெல் வேலியை 'டின்னவேலி எனச் சொல்லினர். தரங்கம் பாடி