பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - - பின்னர்ப் பாஷையைத் தமிழாக்கிப் பாடை சுமக்கிறோம். இந்தச் சுமை ஏன் ? இப்படியெல்லாம் எழுதினால், பேசிiற்றான் விரிந்த மனப்பான்மையராக முடியுமா ? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் செயலன்றோ இது? இருமொழிச்சொற்களைக் கையாள்வது அறவே கூடாது என்று நான் கூறுவதாகக் கருதிவிடாதே. அப்படி அடியோடு வேண்டாமென்று சொல்லவில்லை. இன்றியமையாத இடங்களிலே எந்த அளவு கையாளலாமோ அந்த அளவு கையாள வேண்டும். எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாள வேண்டும். அளவும் முறையும் மீறுதல் கூடாது. பாலில் நீரையோ மோரையோ எதற்காகக் கலக்கிறோம். ஏதோ ஒரு தேவையை முன்னிட்டுதானே 2 அது போலத் தேவையை முன்னிட்டு பிற சொற்களைக் கையாள்வது வரவேற்கத்தக்கதே. நீரோ, மோரோ அளவுக்கு மீறினால் பாலின் தன்மை கெட்டுவிடுமன்றோ ? அது போலப் பிற மொழிக் கலப்பால் தமிழின் தன்மை கெட்டுவிடாமற் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இருக்கும் சொற்களை விடுத்து வேறு மொழிகளைக் கடன் வாங்குதல் கூடாது என்று தான் சொல்கிறேன். நம் முன்னோர் பிற மொழிகளைக் கையாளலாம் என இடந்தந்துள்ளனர். தமிழ் மொழியிற் சொற்களை நான்கு வகையாக வகுத்துள்ளனர். இயற்சொல் திரி சொல் திசைச் சொல் வடசொல் என்பன அவை. எளிதில் எல்லாராலும் பொருளறியக் கூடிய சொல் இயற்சொல் எனப்படும். கற்றவரால் மட்டும் பொருளறியக் கூடிய சொல் திரி சொல்லாகும். தமிழகத்தின் பிற திசைகளி லிருந்து வந்து இங்கே வழங்குஞ்சொல் திசைச் சொல் எனப்படும். வடசொல் எனப்படுவது வடமொழியில் உள்ள