பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- T T — (112 அன்புள்ள இளவரசனுக்குெ - - _ பயன்படுத்துதல் வேண்டும் ? மகிழ்ச்சி இருக்கும் போது, சந்தோஷம் ஏன் ? 'ஜாக் கிரதை என்று சொல்லாது விழிப்புணர்வோடு இரு சாதம்’ என்று சொன்னாற்றான் சோறு கிடைக் குமா ? ஜூலம் என்று சொல்லாவிடின் தண்ணிர் உள்ளிறங்காதா? தண் ணிர் ஊற்று நம்மிடம் இருக்கும் போது, "வாட்டர்’க்கும் பானி’க்கும் மாற்றானிடம் சென்று ஏன் மண்டியிட வேண்டும் ? தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமே தவிரப் பிற சொற்களை ஏன் கலக்க வேண்டும் ? கலந்தால் எப்படித் தமிழ் வளரும் ? ク இன்னு சிலர், தமிழ்ச் சொற்களையே பிற மொழிச் சொற்கள் போல வழங்கலும் உண்டு. அக் கொடுமையும் ஒழிய வேண்டும். வேஷ்டி பதஷ்டம் என்ற சொற்கள் வடமொழியில் இல்லாதிருந்தும் வேஷ்டி, பதட்டம் என்ற நல்ல சொற்களைத் திரித்து வடமொழி போல ஒலித்து மகிழ்கின்றோம். சூடு என்ற தமிழ்ச் சொல்லை 'ஜா டு என்று பலர் பேசுவதைக் கேட்டிருப்பாய். காட்சி (காண்+சி) என்ற சொல்லைக் 'கா கூறி யாக் கிக் கண் டு களிப்போரும் உளர். இதனை அறியாமையென்று சொல்வதா ? அடிமை மனப்பான்மை யென்று சொல்வதா ? இத்தகைய குறைபாடுகளையெல்லாம் அகற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும். நீர் என்ற தமிழ்ச் சொல்லைக் கன்னடியர் நீரு எனச் சொல்கின்றனர். தெலுங்கர் நீளு’ எனச் சிறிது திரித்து வழங்குகின்றனர், மலையாளிகள் வெள்ளம்’ என்ற தமிழ்ச் சொல்லால் நீரைக் குறிப்பிடுகின்றனர். விரிந்த மனப்பான்மை படைத்த நாமோ ஜூலம், வாட்டர், பாணி' என்று கூறி வேட்கை மீதுர அலை கிறோம். இவ்வாறு அலைவது கிடக் கட்டும். மொழி என்று கூடச் சொல்லக் கூசு கிறோமே, பாஷை என்று பகர்ந்து பாழாகிறோம்.