பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன் - - - 125 _ _ – - _ _ வியப்பாகவும் இருந்தது. அவ்வாறானால் மரபு கெட்ட கவிதை யென்று ஒன்றுளதா? மரபு அமைந்திருந் தாற்றானே கவிதையெனப்படும். அது கெடின் கவிதையை /னப்படாதி. பிள்ளை பெற்ற தாய் என எவரும் கூறார். பிள்ளை பெறாத தாய/ரும் உளரோ ? தாய் என்னும் பெயர் பிள்ளை பெற்றவளுக்குத் தானே உரியது. ஆதலின் இனி, மரபுக் கவிதை யென்று எழுதாதே. கவிதை யென்று மட்டும் எழுது. கவிஞன் என்பவன் சமுதாயத்தின் வழிகாட்டி, குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்துத் திருத்தும் ஆசான். அந் நிலைக்கேற்ப உன் பாடல்கள் அமைய வேண்டும். வெறும் புகழுக்காக-பணத்திற்காககவிஞன் எனப் பெயர் பெற வேண்டும். என்னும் ஆவலுக்காகக் கண்டபடி எழுதாதே. ஒர் குறிக்கோள் வேண்டும். கவிஞன் அச்சத்தையும் அடிமை மனப்பான்மையையும் அடியோடு விட்டு விட வேண்டும். துணிவும் பெருமிதமும் தேவை. பெருமிதம் எவ்வளவு தேவையோ அவ்வளவு அடக்க வுணர்வும் வேண்டும். ஒரு கவிஞன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களைப் போற்றுதல் ஒர் உயரிய பண்பாகும். இதனைப் பரம்பரையுணர்வு என்பர். தன் காலத்தில் வாழும் சான்றோரையும் போற்றும் விரிமனம் வேண்டும். நான் கூறியவற்றை மனதிற்கொண்டு, அவ்வா றொழுகினால் நீயும் உயர் கவிஞனாகலாம். நிலைபேறுடைய படைப்புகளையும் படைக்கலாம். உன் தந்தை முடியரசன்