பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

__ -T | 128 - "அன்புள்ள இளவரசனுக்கு ...] --- _ - - எ ன மறு மொழி வி டு க் கி ன் றா ன் , அ ஃதாவது 'இறைவனாகிய அரசன் (இராவணன்) தீது நினைத்தால் அதனைத் தடுத்துத் திருத்த வேண்டும். இயலாவிடின் போர் க் கோலம் பூண் டு அவனுக்காகப் போர்புரிந்து ஒருத்தனாகிய அண்ணன் இராவணனுக்கு முன்னர் ப் போர்க்களத்தில் மடிய வேண்டும், அவனிட்ட சோற்றையுண்டு வளர்ந்த நமக்கு இது தான் கடமையாகும்” என்பது கருத்து. இங்கே ஒருத்தன் என்ற சொல்லைக் கம்பன் பய ன் ப டு த் தி யு ள் ளா ன் , எண்ணுப் பெயரில் வரும் பொழுது, ஆண் பால் ஒருமை ஒருவன் என்றும் பெண் பால் ஒரு மை ஒருத்தி என்றும் வருதல் வேண்டும். இஃது இலக்கண விதி. ஒருத்தன் என்றோ ஒருவள் என்றோ வருவது வழு. ஆனால் கம்பன் எதுகை நயத்துக்காக ஒருத்தன் என்றே பயன்படுத்துகிறான். ஒரு காரணம் பற்றி இலக்கண விதியை மீறிச் செல்கிறான். சான்றோர்கள், கவிஞர்கள் இவ்வாறு இலக்கணத்தைத் தம் வழி க்குக் கொண்டு வருவதுண்டு. இத்தகைய உரிமைகள் கவிஞர்களுக்குண்டு. உரிமை யுண்டு என்பதற்காக எல்லாவிடங்களிலும் இலக்கணத்தைத் தூக்கி எறிந்துவிடுதல் கூடாது, வழு, வழாநிலை, வழு வன மதி என மூன்று நிலையுண்டு. அஃதாவது குற்றமுயைது. குற்றமில்லாதது, குற்ற மாயினும் சான்றோர் வழக்கில் வருவதால் அமைத்துக் கொள்வது. இம் மூன்றாம் நிலைக்குத்தான் வழுவமைதியென்பர். இவ்வாறு கூறுவதால் வழுவமைதிகளையே அமைத்துப் பாடல் எழுதி விடலாமா ? காரணங் கருதியோ, தேவை கருதியோ இ லக் கண விதிகளை மீறலாமே தவிர, மீறுவதையே கொள் கையாகக் கொண்டு விடுதல் கூடாது. புலமையோடு ஒன்றாகக் கலந்து ՃՆ