பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் 127) “நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள் தோயா தார்” (குறள் - 149) இக் குறட்பாவில் முதற் சீரில் முதற்சொல் நலக்கு” ான்பதாகும். இஃது இலக்கண நெறிப்படி வர வேண்டு மானால் 'நலத்துக்கு என வருதல் வேண்டும். நலம் ான்ற மகரவீற்றுச் சொல் நான்காம் வேற்றுமை உருவாகிய 'கு' என்பதோடு சேருங்கால், அத்துச் சாரியை பெற்று 'நலத்துக்கு’ என வருதல் வேண்டும். மனம்+கு மனத்துக்கு ான்பதுபோல, இஃது இலக்கண விதி. இவ் விதிப்படி 'நலத்துக்குரியர் என வந்தால், நான்கசைச்சீர் வெண்பாவுள் வந்து விடும். வெண்பாவுக்குரிய செப்பலோசை கெடும். வள்ளுவர் விதியை முறியடித்தார். இலக்கணத்துக்குக் கட்டுப்படாமல் அதனைத் தாம் கட்டுப்படுத்தி, நலக்குரியார்’ ான அமைத்துவிட்டார். யாப்பிலக்கணத்தைக் காப்பாற்றப் புணர்ச்சியிலக்கணத்தைப் புறங்க ண் டார். கம்பன் பலவிடங்களில் இலக்கணத்தைத் தன் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறான். இராவணனை விடுத்து, இராமனோடு சேர்ந்து கொண்ட வீடணன், கும்ப கருணனையும் இராமனுடன் சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறான். அதற்கு உடன்படாது மறுத்துரைக்கும் கும்பகருணன், "கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராதாயின் பொருத்துறு பொருளுண் டாமோ பொருதொழிற் குரியராகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்த்குரிய தம்மா” (கும்ப கருணன் வதைப்படலம் 157)