பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - 137 'இத்துடன்' என்பது சரியா? 'இத்துடன்' என எழுதுவது தவறு. 'இஃதுடன்' என எழுதவேண்டும் அல்லது 'இதனுடன்' என்று 'அன்' சாரியை சேர்த்து எழுதலாம். 'இது+உடன்' சேரும்பொழுது, 'இது' என்பது இடையில் 'ஆஃதம்' பெற்று 'இஃது' எனவரும். அது, இது, உது என்னும் சுட்டு மொழிகள், வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் அவை ஆய்தம் பெறும் என்பது விதி. அவ்விதிப்படி "இஃதுடன்” என வந்தது. அச் சொல்லை நாளடைவில் இத்துடன் எனத் தவறாக ஒலித்துப் பழகிவிட்டோம். இன்றுங் கூடச் சிலர், அஃது, இஃது என்னுஞ் சொற்களை, அக்து, இக்து என அழுத்தமாகச் சொல்வதைக் கேட்கிறோம். இவ்வாறுதான் பல சொற்களைப் பிழைபட ஒலித்துத் தடுமாறுகிறோம். மனமா ? மனதா? மனம் என்ற மகர வீற்றுச் சொல்லை மனது என்று பிழையாக எழுதி வருகிறோம். மனம் என்பது நல்ல தமிழ்ச் சொல். நாம் மனது என்று எழுதுவதால் சிலர், அச்சொல் வடமொழியிலிருந்து வந்தது என்றும் மனசு என்பது மனது ஆயிற்று என்றும் துணிந்து கூறுகின்றனர். மனம் என்தும் மகரவீற்றுச் சொல் வேற்றுமை உருபுகளுடன்) சேரும் பொழுது மனத்தை, மனத்தால், மனத்துக்கு என அத்துச்சாரியை பெற்றுவரும். இதை நன்கு நினைவில் நிறுத்து. இனி மனதை என்று எழுதாதே, மனத்தை என்றெழுது!