பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அன்புள்ள இளவரசனுக்கு . -- - - - என்றனா ? எந்தனா ? I 18 அடுத்து 1յա என்று எழுதியிருந்தனை அதுவும் தவறு என்றன் என்றுதான் எழுத வேண்டும். இச்சொல் என் தன் எனப் பிரிக்கப்படும். தன் என்பது சாரியை இஃது ஒரு மைக் குரியது. பன்மையாயின் எந்தப் என்று வரும். அது, எம்+தம் எனப் பிரிக்கப்படும் பன்மைக்குத் தம்’ என்னும் சாரியை கொடுத்து எழுத வேண்டும். நீ யோ ஒரு ைமயையும் பன் மை யையும் சேர்த்துக் குழப்புகிறாய். நீயும் குழம்பாதே; பிறரையும் குழப்பாதே. திருநிறை செல்வனா? திருநிறைச்செல்வனா ? நம் இல்லத்திற்கு வரும் திருமண அழைப்பிதழ்களைப் பார்த் திருக்கிறாய். அவற்றில் எண்பது விழுக் காடு திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி என்றுதான் காண ல் கூடும். அவ்வாறெழுதுவது பிழையாகும் திருநிறை செல்வன் என்று ஒற்றுமிகாமல் எழுதுதல் வேண்டும். அச்சடிக்க க் கொடுப் போர், சரியாக எழுதியிருப்பினும் அச்சகத்தார், திருத்தி நிறைச் செல்வன் என்றே அச்சடித்துக் கொடுப்பர். நிறைச் செல்வன் என்றால் எடை மிகுந்தவன் என்று பொருள். அஃதாவது பருமனானவன் என்று பொருள். மணமகனோ மணமகளோ பருமனாக இருந்தால் அழகாகவா இருப்பர். திருநிறை செல்வன் என்றிருந்தால், அழகுமிகுந்தவன், செல்வமிகுந்தவன் என்று பொருள். நிறை செல்வன் என்பது வினைத் தொகை என்று இலக்கணம் கூறும்; வினைத் தொகையில் ஒற்று