உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. அன்புள்ள இளவரசனுக்கு ...) 'சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்-வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000/- அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை-1993. 'இராணா இலக்கிய விருது, பொற்குவை ரூ.10,000,- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994. 'கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி -1996 "பொற்கிழி பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லுரி, மேலைச்சிவபுரி - 1997 'கலைமாமணி விருது-பொற்பதக்கம்-செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை -1998 பிற குறிப்புகள் இளம் பருவத்தில் கவிதை உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள். 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939) 21ஆம் அகவை முதல் சமுதாயச்சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940) 21ஆம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல்முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப்பட்டது (1940). தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940) தன்மான இயக்கத் தொடர்பால் வித்துவான் தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். (1943) புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார் (1947) நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி. அங்கிருந்த சிறை வாழ்க்கையும் மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ்களில் இலக்கியப்பணி - பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49)