பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 140 அன்புள்ள இளவரசனுக்கு ...] இருத்தல் வேண்டும். ஆனையர்’ என்றல்லவா தவறாக இருக்கிறது என்று வருந்திக் கூறினேன். 'ஆணையர் யானை போலப் பேருருவம் உடையவர். அதனால் ஆனையர் ஒன்றிருப்பதே பொருந்தும் என்று அவ்வாறு எழுதியுள்ள்ர்ர்” என்றார். உடனே நான் வருத்தத்தை விடுத்துச் சிரித்து விட்டேன். அவரும் சிரித்தார். நம்மைத் தமிழர் என்று நாண மின்றிக் கூறிக்கொள்கிறோம். நாம் வாழும் நாட்டைத் தமிழ் நாடென்றும் சொல்கிறோம். அங்கேதான் நம் தாய்மொழி இந்தப் பாடுபடுகிறது. கழி பேருவகையா? களி பேருவகையா ? முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் என க்கு மடல் எழுதியிருந்தார். என்னை ப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அதில் களி பேருவகை எய்துகிறேன்' என்று எழுதியிருந்தார். என்னைப் பாராட்டி யிருப்பினும், அவர் பிழைபட எழுதியிருந்தமை வருத்தத்தையே தந்தது. பேரு வகை என்றால் பெருமகிழ்ச்சி யென்று பொருள். கழிபேருவகை என்றால் மிகுதியான பெருமகிழ்ச்சி என்று பொருள். அஃதாவது அளவு கடந்த மகிழ்ச்சி யென்பது பொருள். “சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்” என்று இலக்கணம் கூறும். நான்கு சீர்கள் கொண்ட அடி, அளவடியெனப்படும். அய்ந்து சீர்கள் கொண்ட அடி நெடி!டியென்ப்படும். ஆறும் ஆறுக்கும் மேற்பட்ட சீர்கள் கொண்ட அடி கழிநெடிலடி ர்னப்படும். இதனை அவருக்கு எழுதியிருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. மீண்டும், மீண்டும்