பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(IggrrrzzHILD727تruzz--] நப்பிச் சென்றுவிடும். எல்லா நலனும் அழிந்து, பின்னர் பருந்த நேரிடும். செல்வம் அழியும்; யாக்கை அழியும்; ஆனால், செய்த அறம் என்றுமே அழியாது. இம் மெய்யறிவு வாய்க்கப் பெற்ற காரணத்தாற்றான், உலகத்துச் சான்றோர், நிலையான அறத்தைச் செய்து போந்தனர். தமிழ் நாட்டிலும் அயல் நாட்டிலும் வாழ்ந்து மறைந்த வள்ளல் பலரைப் பற்றி, நான் முன்னரே உனக்கு விளக்கிக் கூறியிருக்கிறேன். அவ் வள்ளல்கள் மறைந்தாலும் அவர்கள் ஆற்றிய அறம் மறையவில்லை. அவர் தம் புகழ் மாயவில்லை. மன்னாவுலகத்து மன்னிய அறம் புரிந்து, தம் புகழ் நிறுவித் தாம் மாய்ந்தனர். செல்வம் நிலையாதது; அதனாற் செல்வத்தை ஈட்ட வேண்டா என இயம்பவில்லை. யாக்கை நிலையாதது; அதனால் யாக்கையைப் பேணிக் காக்க வேண்டா எனப் பேசவில்லை. இந் நிலையாமையை உணர்ந்தால், தனக்கே வேண்டுமென்னுந் தன்னலப் பற்றுக் குறையும்; குறைந்தாற் பொதுநலம் போற்றும் எண்ணம் விரியும்; விரிந்தால் அறஞ்செய்ய ஆசை தோன்றும்; தோன்றவே நிலையாய - தலையாய செயல்களைச் செய்து. என்றும் நின்று நிலவும் புகழைப்பெற்று, மக்கட் பண்புடையராய் வாழ்ந்து, மானிடப் பிறவியின் பயனை எய்தும் பேற்றினை அடையலாம் என்ற ஆர்வத்தால் எழுதுகிறேன். நாடோறும் அறஞ் செய்வது நல்லதுதான், ஆயினும், பல்லாராலும் எப்பொழுதும் அதனை ஆற்றுவது, இயலாது; சிலரால் இயலும், இயலாதவர் சில நாளேனும் அறஞ் செய்தல் வேண்டும். சில நாட் செய்யும் அவ்வறமும் சிறந்த