பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - அன்புள்ள பாண்டியனுக்கு... T வகையாற் செய்தல் வேண்டும். ஏதோ செய்வோம் என்று கடனுக்காற்றுதல் கூடாது; ஈதே செய்வோம் என்று கடமைக் காற்றுதலாக இருக்க வேண்டும். இப் பருவத்திலே, இவ்வளவுஞ் செய்துவிட முடியுமே என்று மலைத்துவிடாதே. அதனாற்றான், அறஞ்செய் என்று எழுதவில்லை; அறஞ் செய்ய விரும்பு என்றெழுதினேன் மனத்தால் நினைப்பதுவும் செய்வதற்கு.நிகராகும் என்பது வள்ளுவத்தின் குறிக்கோள். ஆதலின், முதலில் மனத்தா விரும்பு. விருப்பம் வளர வளரப் பருவமும் வளரும். வளர்ந்த பின்னர் அது, செயலுருவம் பெறும். ஆகவே, அறஞ் செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள். "ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்”. இங்ங்னம் அறிவுடை நம்: