பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. அங்கிருக்கும் ஆழ்நிலைகளைப் பற்றி யெழுதியிருந்தாய். அவை ஏற்ற முறையில் அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நன்கு அமையாவிடினும் நம் முயற்சியால் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அன்பால் எதையும் செய்ய முடியும். தம்பி, உனக்கு அடிக்கடி இத்தகைய கடிதங்கள் எழுதி, உன் மனத்தைப் பண்படுத்த எண்ணுகின்றேனே, அதற்குக் காரணம் என்ன ? உன்பாற் கொண்ட அன்புதான். வீட்டிலிருக்கும்பொழுது, சில வேளைகளில் உன்னைக் கடிந்துரைத்திருக்கின்றேன். அல்லவா ? அதற்கும் அன்புதான் காரணம். நீ செய்த தவறுகளைச் சில சமயங்களில் உன் தாய், என்னிடங் கூறாமல் மறைத்து வைத் தாரே, அதற்குங் காரணம் அன்பு தான். நம் இல் லத்திற்கு விருந்தினர் வரும்பொழுது, நம் இல்லாமையைக் காட்டிக் கொள்ளாமல், வந்தவர் மகிழும் வண்ணம் விருந்தோம்பும் பண்பிலே உன் அன்னை எவ்வளவு தலைசிறந்து விளங்கு