பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[of முடியரசன் -- ரைக்கப்படுவான். அன்பினைத் துறந்து திரிபவன், பளிதனென மதிக்கப்பட மாட்டான்; உயிரற்ற உடலாக தும் புந் தோலும் போர்த்த உருவமாக எண்ணப் படுவான். ஆதலின் ஒருவர், மற்றவர்பால் அன்புடையராகி முமுகுதல் வேண்டும். இவ்வன்பு கண்ணுக்குப் புலனாகும் பொருளன்று. கட்புலனாகாப் பொருள்களுள் ஒன்றாகும். அவ்வாறாயின், அன்பின் இருப்பை எவ்வாறு புரிந்து கொள்வது ? என வினவலாம். அவரவர் செய்யுஞ் செயல்களே அன்பின் 'இருப்பை வெளிப்படுத்திக் காட்டிவிடும். எவருமே தம்முள்ளத்துள் அன்பை அடைத்துப் பூட்டி வைத்துவிட 'முடியாது. தம்மால் விரும்பப்பட்டவர் துன்புறுவதைக் காறும் பொழுது, அன்புடையார் கண்களில், தானே நீர் அரும்பித் ததும்புவதைக் காண்கிறோம். உள்ளத்துள் மறைந்து கிடந்த அன்பை, விழி சிந்தும் நீரே பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி விடுகிறது. நம் பக்கத்து வீட்டிலிருந்த உடன் பிறந்தார் இருவரும், பாகப் பிரிவினை காரணமாகப் பகைமை கொண்டு, தனித்தனியே பிரிந்தனர். அவ்விருவரும் இனி ஒன்றுபடப் போவதில்லை ான ஊரார் கூறுமளவுக்கு வேறாகி நின்றனர். ஆயினும் ஒரு நாள், இளையோன் கடனுக்கு ஆளாகிச் சிறைப் பட்டான் என்ற செய்தியைக் கேட்டுக் கண் கலங்கித் துடிதுடித்து நம் இல்லத்திற்கு மூத்தவர் ஒடி வந்ததைப் பார்த்தாயல்லவா? அதனால் அன்புடையார் நெஞ்சத்துட் பகைமை பூத்திருந்தாலும், அதற்கும் அடியில் புதைந்து டெக்கும் அன்பு, விழிகளின் வழியே வெளிப்பட்டுவிடும் பன்ற உண்மையை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.