பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- _ _ = 152 அன்புள்ள பாண்டியனுக்கு... அன்பிற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. அன்பு, பொது நலத்தைப் பேணி வளர்க்கும், அன்பின்மை, தன் ை லத்தையே போற்றிக் காத்து வள்ர்க்கும். அன்புடையார் பிறர்க்குப் பயன்படுவர்; அன்பிலார் தமக்கே பயன்படுவர் மற்றவர்க்குப் பயன்பட விழைவோர், உடல், பொருள் உயிர் மூன்றாலும் பிறர் க்கே உரியராவர். தமக்கே பயன்பட வாழ்வோர் எல்லாம் தமக்கே உரியராவர். சிபிச் சக்கரவர்த்தியின் கதை உனக்குத் தெரியுமல்லவா ? அவர் ஒரு புறாவுக்காகத் தன் சதையை அரிந்து தந்தார் என்பதைப் படித்திருக்கிறாய். ததி சிமுனிவர் என்பவர், இந்திரனுக்குத் தம் முதுகெலும்பைக் கொடுத்தார் என்று திரு விளையாடற் புராணங் கூறுகிறது. இவ் விரு நிகழ்ச்சிகளும் அன்புடையார், எவ்வகைத் தியாக முஞ் செய்யத் தயங்கார் என்ற உண்மையைக் காட்டுகின்றன. நட்பு, உலகத்தில் மிகச் சிறந்த ஒரு பண்பாகும் அப்பண்பினை அன் பொன்றே தரவல்லது. யாவரிடத்து நீ அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் பகைவனும் பகைமை பாராட்டாமல், நண்பனாக மாறி விடுவான் அயலவராக இருப்பவரும் உன் பால் நண்பு கொள்ளவே விரும்பி வருவர். ஆதலின் உனக்குத் தீங்கு செய்தா ரிடத்தும் அன்பு காட்டு. பகைமைக்கே இடமில்லாமற் போய்விடும். பகையை வெல்வதற்கு, அன்பைப் போன்ற சிறந்த கருவி வேறொன்றில்லை. குடும்ப வாழ்க்கைக்கு, அன்பு எவ்வாறு இன்றியமை யாது வேண்டப்படுகிறதோ, அதைப் போலவே சமுதாய வாழ்க்கைக்கும் அன்பு கட்டாயம் வேண்டப்படுவதாகும்