பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... வேண்டும். ஒருவர் பொறை, இருவர் நட்புக்கு ஏதுவாகும். நெல்லுக்கும் உமியுண்டு; உமியிருப்பதால் நெல்லை வெறுத்து விடுவதில்லை. கண்ணில், கை விரல் பட்டு விடுவதால் அவ் விரலை வெட்டி விடுவதும் இல்லை. அவ்வாறு கருதிப் பழகுதல் வேண்டும். அளவுக்கு மீறிய குறைகள் காணப்படின் அவரைத் துாற்றித் திரியாமல், தூர விலகிவிட வேண்டும். ஆதலின் நீ நட்பின் அருமை பெருமைகளை அறிந்து, உண்மை நட்பின் இயல்பை உணர்ந்து, போலி நட்பின் இயல்பைப் புரிந்து, வேண்டும் நட்பை விரும்பி, வேண்டா நட்பை விலக்கி, நல்வாழ்வு வாழ்வாயாக. "செயற்கரிய யாவுள நட்பின் ! அதுபோல் வினைக் கரிய யாவுள காப்பு”. இங்ங்னம், அறிவுடை நம்பி