உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் பெற்றேன். மகிழ்ச்சி. நீ நண்பர்களிடம் அன்பாகப் பழகுவதாகவும், அவர்கள் உன்னிடம் அன்பாகப் பழகுவதாகவும் எழுதியிருக்கிறாய். நல்ல நண்பர் களென்றுங் குறித்திருந்தாய். அவ்வன்பு உண்மையானதாக இருக்கவேண்டும். போலியன்பாக இருத்தல் கூடாது. பொதுவாக எதிலுமே போலி கூடாது. உண்மையின் ஒளியே வேண்டும். உள்ளத்தில் ஒளி புண்டாயின் வாக்கினிலும் செயலிலும் ஒளியுண்டாகும். உண்மை, மனிதனை மேலும் மேலும் உயர்த்துகிறது: பொய்ம்மை, அவனைப் படுகுழியில் வீழ்த்தி விடுகிறது. இதனைப் பல வரலாறுகளும் கதைகளும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இலக்கியச் சான்றுகள் ஒரு புறமிருக்க, நம் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நோக்கினால் இது நன்கு புலனாகும். நமக்கு விடுதலை தேடித் தந்த காந்தியடிகள் நம் நாட்டு மக்களாற் போற்றப் படுவதோடன்றி, உலகத்து மக்கள் அனைவராலும்