உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - - அன்புள்ள பாண்டியனுக்கு. | கூறப்பட்ட பிற அறங்கள் இல்லை” எனத் துணிந்து, அறுதியிட்டுக் கூறுகின்றார். இத்தலை சிறந்த அறத்தைக் கைக்கொண்ட நம் சான்றோர் பழியெனில் உலகுடன் பெறினுங் கொள்ளாதவராகி வாழ்ந்தனர். அவர் வழிவந்த நாமும், இவ் வையகம் முழுவதும் பெறுவதாயினும் பொய்ம்மொழி கூறாது வாழ வேண்டும். உண்மை கூறுவதால் எத்தகைய துன்பம் வரினும் மனத்துணிவுடன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்: அப்பொழுது நிலைத்த வெற்றியை நாம் அடைய முடியும். பொய்யன் என்றிருந்தால், உலகம் ஒரு பொழுதும் நம் பாது. சமுதாயத்தில் நன் மதிப்புங் கிட்டாது. பழியும் இழிவும் பற்றிக்கொள்ளும். மீளாத் துயரில் வீழ்ந்து, பாழாம் நிலையை அடைய நேரிடும். ஆதலின், கனவினும் பொய்ம்மையைக் கருதாதே. உண்மை விரும்பு; அதைய விளம்பு. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு”. இங்ங்னம், அறிவுடை நம்பி