பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - == 185) கவியரசர் முடியரசன் - - - - - அப்பொழுதுதான் அதற்குச் சிறப்பு: பொருந்தாவிடின் அவ்வாய்மையால் எவ்வகைப் பயனும் இல்லையாகிவிடும். முதற்கடிதத்தில் அறஞ்செய்யவிரும்பென எழுதியிருந் தேன். ஏனைய அறங்களைச் செய்யாவிடினுங்குற்றமில்லை; பொய்யாமை என்னும் அறத்தைச் செவ்வனே கடைப்பிடித் தொழுகினாலே போதும். பொய்யாமையில் வழுவாது நின்றொழுகினால் ஏனைய அறங்கள் தாமே வந்தெய்தும். இப்பிறவியில் உயர்ந்த புகழெய்த விரும்பும் ஒருவன் பொய்யாமை என்னும் ஒரறத்தைத் துணையாகக்கொள்ள வேண்டும். புகழெய்த இதனினுஞ் சிறந்த துணை வேறொன்றில்லை. உடலின் புறத்தே படிந்துள்ள மாசு நீங்கவும், உடல் தூய்மைபெறவும் நாடோறும் நீராடுகின்றோம். புறத்தைத் தூய்மை செய்ய நீர் காரணமாகிறது. அதுபோல, அகத்தைத் தூய்மை செய்ய, அகத்திற்படிந்துள்ள மாசுகள் நீங்க வாய்மையே காரணமாகிறது. வாய்மை, மனமாசுகளைத் துடைத்து விடுவதால் மெய்யுணர்வு துலங்குகிறது. மெய்யுணர்வைப் புலப்படச் செய்வதாற்றான், அவ்வாய்மையைப் பொய்யா விளக்கென்று வள்ளுவர் கூறுகின்றார். ஏனைய விளக்குகளெல்லாம் புறத்திருளைப் போக்குவன. வாய்மை ான்னும் விளக்கு, மனத்திருளை நீக்குவது. ம்னத்திருளை நீக்கி, மெய்யுணர்வைப் புலப்படுத்த வல்ல பொய்யா விளக்காகிய வாய்மையைச் சிறப்பித்துக் கூறவந்த திருவள்ளுவர், "மெய்ந் நூல்களாக யாம்கண்ட நூல்களுள், வாய்மையைவிடச் சிறந்தனவாகக்