பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - - -T ಈFrīಿಆ। | கருத்திற் கொள்ளத்தக்கதாகும். மழை பொழிகிறது; ஊருணியில் நீர் நிறைகிறது; அது பாழாகாது, நெடுங்காலம் நின்று, எல்லார்க்கும் தப்பாது பயன்படுகிறது. அதுபோல, அவன் பாடுபடுகிறான்; செல்வங் குவிகிறது; அச்செல்வம் பாழாகாமல், நெடிது நின்று, அனைவருக்குந் தவறாது பயன்பட வாழ்கிறான் என்பது கருத்து. பயன்மரம் ஊரின் நடுவே பழுத்து நின்று, எல்லார்க்கும் எளிதிற் பயன் கொடுக்கிறது. ஒப்புரவாளனும் மாந்தரிடையே செல்வங் கொழித்து நின்று, அனைவர்க்கும் எளிதில் உதவும் பண்புடையவனாக இருந்து வாழ்கிறான். மருந்து மரம், எளிதிற் கொள்ளுமிடத்தே நின்று, மறைவிடத்தில் நில்லாது வெளிப்பட நின்று, காலத்தால் வேறுபடாது நின்று பயன் தருகிறது; வெட்டினாலும் முறித்தாலும் தன்குறை நோக்காது, வேர், பட்டை இல்ை, பூ முதலிய எல்லா உறுப்புகளாலும் பயன் தருகிறது. அதுபோல ஒப்புரவாளனும் பிறர் எளிதில் உதவிபெறும் வகையில் நின்று, காட்சிக் கெளியனாகி, வறுமையினும் வேறுபடாது என்றும் பயன்பட வாழ்கிறான்; பிறர், இடர்தரினும் இழிமொழி கூறினும் அக்குறை நோக்காது, உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தாலும் பயன்பட வாழ்கிறான். தாம் செய்யத்தக்க கடமைகளை யறிந்த நல்லறிவாளர், செல்வஞ் சுருங்கி, வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்வதிலே தளரமாட்டார். செல்வம் ஒழியினும், உழைப்பாலும் பிறவற் s H 劃 軸 Hol • றாலும் பிறர்க்கு உதவியாக இருப்பர். புலவர்க்கெல்லாம்