பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் ஒழுக்கமுடையவன் எல்லாச் சிறப்புகளையும் அடை கிறான். அஃதில் லான் தாழ்நிலையை எய்துகிறான். ஆதலால் சிறப்புகளைத் தரவல்ல ஒழுக்கத்தை, உயிரினும் மேலாக மதித்துப் போற்ற வேண்டும். எல்லாப் பொருள் களையும்விட உயிர் சிறந்ததுதான். ஆயினும் உயிர் ஒரு வனுக்குச் சிறப்புத் தருவதில்லை.அஃறிணைப் பொருள் களிடத்தும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. இரு தி ைண க்கும் பொதுவாக வுள்ளது உயிர். அதனால் ஒரு திணைக்கும் தனிச் சிறப்பு விளைவ தில்லை. ஆனால், ஒழுக்கம் தனிச் சிறப்பைத் தருகிறது. அவ்வொழுக்கமே அவனை உயர்திணையாக்குகிறது. அதனால் சிறப்புத்தராத உயிரை விடச் சிறப்பைத் தரும் ஒழுக்கமே உயர்ந்ததாகிறது. ஆதலின் ஒழுக்கத்தினை உயிரினுஞ் சிறந்ததாகக் கருதி, எவ்வகையாலுஞ் சிதையாமற் பேணி, முயன்று காக்கவேண்டும். மனிதர்க்குள் உயர்வு, தாழ்வு பேசுகிறோமல்லவா ? எதனை அடிப்படையாக வைத்துப் பாகுபாடு செய்கின்றோம்? பிறப்பையோ, செல்வத்தையோ அடிப்படையாகக்கொண்டு பாகுபாடு செய்திருக்கின்றோம். ஆனால், வள்ளுவம் ஒழுக்கத்தைக் கொண்டே உயர்வு தாழ்வு என்னும் பாகுபாட்டை விதிக்கின்றது. ஒழுக்கமுடையவன் எவனோ அவன் உயர்குடிக்குரியவன். ஒழுக்கந் தவறியவன் எவனோ அவன் தாழ்ந்த குடிக்குரியவன். தன்னை உயர்ந்து நிறுத்துவானும்

  1. /