பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, . நலம். உன் கடிதம் கிடைத்தது. கல்வியின் சிறப்பை யெல்லாம் உனக்குப் பல முறையும் நேரில் சொல்லியிருக் கிறேன். ஆயினு கல்வி பயில்வதற்குக் கால எல்லை எது என்பதைப்பற்றி உனக்குக் கூறியதில்லை என்று கருது கிறேன். அதனால் கற்க வேண்டிய கால எல்லை பற்றியும், அதனோடு பிற கருத்துகளையும் இப்பொழுது எழுது கிறேன். இதனைப்பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணம் உன் கடிதத்தைப் படித்த பிறகுதான் தோன்றியது. சில ஆண்டுகளில் படிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்து நம் குடும்பத்திற்கு உதவியாக இருப்பேன்’ என எழுதியுள்ளாய். குடும்பப் பொறுப்புணர்ச்சி இப்பருவத்திலேயே உன்னிடங் காணப்படுவது மகிழ்ச்சிக் குரியதுதான். ஆனால், 'படிப்பு முடிந்துவிடும்’ என்று நீ எழுதியிருப்பதுதான் சரியில்லை. அதனால் அதைப் பற்றி உனக்கெழுதுகிறேன்.