பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் சொல்மிக்க மந்திரமும் உலகில் உண்டோ?அதனால் அத்தெய் வத்தைத் தொழுதெழ வேண்டும். எழுந்தவுடன் அன்று தாம் செய்யவேண்டிய அறங்கள், செயல்கள் முதலியனவற்றைச் சிந்தித்து, வரையறை செய்துகொள்ள வேண்டும். இவ்வா றொழுகின் வாழ்வில் சிறந்த வெற்றி பெறவியலும். இத்தகைய நல்லொழுக்கங்களைத் தேர்ந்தெடுத்து நடக்கக் கற்றுக்கொள். ஒழுக்க நெறிகளினின்றும் வழுவாது, நாடோறும் அந் நெறிகளில் ஒழுகி வரும் ஒருவன், நற்குடி மகனாக விளங்குவான்; நெடுங்காலம் நல்வாழ்வு வாழ்வான்; நோயின்றி வாழ்வான்; செல்வம், வனப்பு, நிலவுரிமை, புகழ், கல்வி முதலிய பேறுகள் அனைத்தும் பெற்று விளங்குவான். ஆதலின் நல்வாழ்வு வாழ, ஒழுக்க நெறிகளில் நட, ஒரு சிறிதும் வழுவாது நட. "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்”. இங்ங்னம், அறிவுடை நம்பி