உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - - - - அன்புள்ள பாண்டியனுக்கு. | SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S - தகாதனவற்றைக் கூறுதல் விலக்கல். பிறர்க்குத் தீங்கு தரும் பொய் முதலிய தீச்சொற்களை மறந்தேனும் சொல்லுதல் கூடாது; பிறர் பெற்ற ஆக்கங் கண்டு பொறாமை கொள்ளுதல் தகாது; பிறர்க்குரிய பொருளைக் கவரக் கருதுதல் பெருங்குற்றமாகும்; புறங் கூறுதலும் பயனில சொல்லுதலும் வெறுக்கத்தக்கன. இவை போல்வன விலக்கலின் பாற்படும். ஆதலின் இத் தீயனவற்றை நீக்கி யொழுகவேண்டும். அன்புடையவனாக இரு, உண்மை பேசு, இகழ்வாரைப் பொறுத்துக்கொள், இனியன கூறு, ஈதல் இன்பம் பயக்கும் என இவ்வாறு சொல்லுதல் விதித்த லின் பாற்படும். ஆதலின் இன்னோரன்ன நன்மைகளைக் கடைப்பிடித் தொழுகவேண்டும். பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுக் கங்கள் எவை எவையென்று முழுமையுங் கூறிவிட இயலாது. ஒரளவே எடுத்தெழுதவியலும். நீயே சிந்தித்துச் சிந்தித்துக் காலத்துக்கேற்பக் கொள்ளுவன கொண்டொழுக வேண்டும்; தள்ளுவன தள்ளி நடக்க வேண்டும். எனினும் ஒரிரு நல் லொழுக்கங்களைப் பற்றி எழுதுகிறேன். வைகறைப் பொழுதில், துயிலெழக் கற்றுக்கொள்ள வேண்டும். அஃது உடலுக்கு மிகவும் நல்லது; உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும்; முகம் மலர்ச்சியாக விளங்கும்; சுறுசுறுப்பைக் கொடுக்கும். எழும்பொழுது தாய் தந்தையரைத் தொழதெழ வேண்டும்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமல்லவா? தாயிற் சிறந்த கோவிலும், தந்தை