பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - T7. "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்”. நல்லொழுக்கமானது, அறத்திற்குக் காரணமாகி நின்று, இன்பத்தைத் தரும்; தியொழுக்கம் மறத்திற்குக் காரணமாகித் துன்பந்தரும் என்பது இக்குறளின் கருத்தாகும். நல்லொழுக்கத்தை அறத்திற்கு வித்து என மொழிந்தவர், தீயொழுக்கத்தை மறத்திற்கு வித் தென்று கூறாது, 'இடும்பை தரும் என்று மட்டுங் கூறிச் சென்றதைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். நிலத்தில் ஊன்றிய வித்து, உடனே கனி பயந்து விடுவதில்லை. அது முளை விட்டுச் செடியாகி, மரமாகிப் பூத்துக் காய்த்துப் பின்னரே கனி தருகிறது. அதுபோலவே நல்லொழுக்கமும் உடனே இன்பம் பயவாது. காலஞ் செல்லச் செல்லப் பயன் தரும். அதனாற்றான் அதனை வித்து’ என்று விளம்பினர். தீயொழுக்கம் அவ்வாறன்று. கால நீட்டிப்பு வேண்டுவதில்லை; உடனே பயன் தந்துவிடும். இதனை யுணர்த்தவே தீயொழுக்கத்தை வித்தென்று உருவகஞ் செய்யாது, இடும்பை தரும் என்ற அளவிற் கூறினர். இக்கருத்தை மனத்திற்கொண்டு, உடனே துன்பம் பயக்கும் தீயொழுக்கத்தை விடுத்து, நல்லொழுக் கத்தையே நாடவேண்டும். ஒழுக்கம் என்றால் என்னவென்று முதலிற் புரிந்து கொள்ள வேண்டும். அறநூல்கள் விதித்தன் வற்றைச் செய்தலும், விலக்கினவற்றை விடுத்தலும் ஒழுக்கமாகும். செய்ய வேண்டுவனவற்றைக் கூறுதல் விதித்தல். செய்யத்