உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- F `=` ` TT | கவியரசர் முடியரசன் 183| சிலவாக அமைந்துள்ளன. அக்குறைந்த நாளிலேனும் கற்றுக்கொள்ளலாம் என எண்ணினால், இடையிடையே வந்து துன்புறுத்தும் பிணிகளோ மிகப் பலவாம். சிற்றறிவுடைய மனிதன், சிறிய வாழ்நாளில் - பல்வகைப் பிணிகளிடையே - கரையில்லா நூற்கடலை எவ்வாறு கடந்து கடைத்தேறுவது? இயலாதல்லவா ? அதனால் கற்கத் தகுந்த நூல்களை உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்களை அறிவையும் பண்பையும் வளர்க்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பயிலவேண்டும். கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என யாரோ சொன்ன கூற்றை நம்பிக்காலத்தைப் பாழ்படுத்தி விடுதல் கூடாது. இன்று, நூல் என்ற பெயரளவில் நம் நாட்டில் வண்ண வண்ண ஏடுகள் பல்கி வருகின்றன. அவற்றை விழைதல் தகாது. கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்றால் கண்ணாற்காணும் பொருள்களிலிருந்து, சில உண்மைகளைக் கற்றுக்கொள்பவன் பண்டிதன் ஆவான் என்பது பொருள். கலை நுட்பங்கள் அயல்நாடுகளில் விண்முட்ட வளர்ந்து வருகின்றன. அவ் வளர்ச்சிகளையெல்லாங் கண்ட பின்னும் நாமும் அவர்களைப் போல ஆகவேண்டும் என்ற ஆர்வமாவது வளர வேண்டாவா? உயர்கலைகள் தோன்ற வேண்டும் என்ற எண்ணமும், அத்தகு நூல்களையே பயிலவேண்டும் என்னும் ஆர்வமும் முதலில் வளரவேண்டும். பயிலத்தக்க நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அய்யந்திரிபறக் கற்கவேண்டும். இதுவோ அதுவோ என்ற அய்யப்பாடும், ஒன்றை மற்றொன்றாகக் கருதும் திரிபுணர்வும்