உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(184_Dರಾತ್ರಾ] இருப்பின் எவ்வளவு நூல்களைக் கற்பினும் பயனேயில்லை. கல்வியில் அகலமும் வேண்டும்; ஆழமும் வேண்டும். அஃதாவது மிகுந்த பயிற்சியும் கூர்த்த அறிவும் வேண்டு மென்பது. கற்கத்தக்க நூல்களைக் கற்றோம்; கசடறக் கற்றோம் என்ற அளவில் இருந்தால் மட்டும் போதாது. என்ன கற்றோம் ? எப்படி வாழ வேண்டும் என்று கற்றோம் ? உயர்வுக்குரிய வழிகளென எவற்றைக் கற்றோம் ? என்று சிந்தித்து, அந்நெறிகளில் வழுவாது நின்றொழுகவேண்டும். அவ்வாறொழுகக் கற்றவனே கல்வியாளன் என்று கருதப் படுவான். கல்வயின் பயன் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கம் இல்லையாயின் கல்வியால் அடையும் பயன்தான் யாது ? கல்வி கற்கும்பொழுது ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் உள்ள தொடர்பு, எவ்வாறிருக்க வேண்டுமென்பதையும் எழுதுவது நலம் பயக்கும் என்று கருதுகின்றேன். இக் காலத்தே ஆசிரியர்கள்பால் மாணவர்கள் நடந்துகொள்ளும் முறை, எனக்குப் பெரிதும் மனவேதனை தருவதாகவே இருக்கிறது. எழுத்தறிவித்தவனை இறைவன் என்று சான்றோர் கூறுவர். தந்தைக்குச் சமமானவன் எனவுங் கூறுவர். இறைவனெனப் போற்றாவிடினும் தந்தை நிலை யிலாவது வைத்து மதிக்கவேண்டுமல்லவா ? தந்தையையுங் கூட இப்பொழுதுள்ள பிள்ளைகள் மதிப்பதில்லையே? என்னதான் உரிமையுணர்வு பெற்றிருப்பினும் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்திருப்பினும் பெற்றோரைப் புறக் கணிக்கும் பிள்ளைகளால் நாட்டின் எதிர்காலம்