பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன் - 185 | ஒளிமயமாக விளங்க வியலாது. அதனால் பெற்றோரை, பெரியோரை,அறிவுக் கண்ணைத் திறந்துவிட்ட ஆசிரியரை மதித்து நடக்கவேண்டும். ஆசிரியருக்கு பணிந்து, அவர் சொல்லை மதித்து நடக்கும் மாணவன், வீட்டுக்கும் நாட்டுக்கு நலம் பயப்பவுனாக விளங்குவான். அவருக்குப் பணிவதால், அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவதால் உரிமைக்கும் தன்மானத்திற்கும் இழுக்கு நேர்ந்து விடப் போவதில்லை. சித்திரப் பாவை யென இருந்து, செவி வாயாக, நெஞ்சுகளனாகப் பாடங் கேட்கும் மனநிலை. ஆசிரியரை மதித்து நடக்கும் மாணவனுக்கே எளிதில் வாய்க்கும், ஆசிரியர்க்குப் படியாதவன், படியாதவனாகத் தான் இருப்பான். இதுவரை கல்வியின் சிறப்பை எழுதினேன்; எத்தகைய நூல்களைக் கற்க வேண்டுமென்றெழுதினேன்; கற்க வேண்டிய முறைபற்றி எழுதினேன். இக்கல்வியை எவ்வளவு காலம் பயில்வது? கால வரையறையுண்டா என்பதையும் எழுதி முடிக்கின்றேன். உயர்நிலைப்பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்து முடித்து விட்டால், கல்வி முடிந்து விட்டதென்று பலருங் கருதுகின்றனர். ஏன், நீயும் அவ்வாறுதான் கருதுகிறாய். அது தவறு. கல்விக்குக் கரையேது ? கால வரையறை தான் ஏது ? கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலுங்கால் நீ இன்பத்தைக் காண்பதரிது. தேர்வுதான் உன் கண்முன் காட்சியளித்துக் கொண்டே நிற்கும். வாழ்வைச் செம்மை