உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... ) படுத்திக் கொள்ள,உள்ளத்தை வளப்படுத்திக் கொள்ள, ஒப்பற்ற இன்பம் நுகர விரும்பினால் கல்விக் கூடத்தைவிட்டு வெளியேறிய பிறகும் படிக்க வேண்டும். எப்பொழுதும் படிக்க வேண்டும்; சாந்துணையும் படிக்கவேண்டும்; ஒதாமல் ஒருநாளும் இருத்தல் கூடாது. திரு.வி.க., மறைமலையடிகள், உ.வே. சாமிநாதைய்யர் போன்ற பெருமக்கள் எப்பொழுது புத்தகத்தைக் கீழே வைத்தார்கள் ? இறுதிவரை புத்தகமுங் கையுமாகவே விளங்கினார்கள். அதனால் உயர்ந்தார்கள்; நம்மையும் உயரச் செய்தார்கள். இத்தகைய சான்றோர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு நீயும் உயர்வாயாக. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்”. இங்ங்னம், அறிவுடை நம்பி