பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... மிக்க ஒழுக்கமுடையார் வாய் ச் சொற்களைக் கேட்க வேண்டும். கேள்வி என்றவுடன் உனக்குத் தேர்வுத்தாள் நினைவுக்கு வரும். அது கேள்வியன்று; வினா எனப்படும். வினா, வாயின் தொழில்; கேள்வி செவியின் தொழில். செவியின் தொழிலாகிய கேள்விச் செல்வத்தைப் பெற்று, அதன் சுவையுணர்ந்து, இன்பந் துய்த்து வாழ்வாயாக. வாழ முயல்வாயாக. "செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்” இங்ங்னம் அறிவுடை நம்பி