பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

»ಫ಼ து. அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. நீதி நூல்களைக் கற்று வருவதாக எழுதியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. காலத்தை வீணாக்காமல், பொன்போலக் காத்துவரின் எதிர்காலம் ஒளியுள்ளதாக விளங்கும். இளமைப் பருவம் அருமையான பருவம்; எதையுந் துணிந்து, வீறுடன் செய்யும் பருவம். அப்பருவத்தைப் பயன்படுத்தும் முறையில் பயன்படுத்தினால் மேன்மை எய்துவது உறுதி. காலத்தை பருவத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல், சோம்பிக் கிடந்தால் வாழ்வில் ாதையுமே செய்து, மகிழ்வு கொள்ள முடியாது. "சோம்பலே மரணம்” என்று பெரியோர் கூறியுள்ளனர். இதனால், முயற்சிதான் உயிர்வாழ்க்கையாகும் என்ற கருத்தைப் பெறுகிறோம். சோம்பலின்றி முயன்று பணி புரிபவனே மரணத்தை வென்றவனாக, உயிர் வாழ்பவனாகக் கருதப் படுவான். அதனால் கணப்பொழுதுகூடச் சோம்பலுக்கு இடங்கொடாதே.