பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C அன்புள்ள பாண்டியனுக்கு... (196 சோம்பல், குடியைக் கெடுப்பதோடு நின்று விடாது; பல குற்றங்களையும் பெருக்கிவிடும். எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும், உண்பதும் உறங்குவதுமாகக் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கும் ஒருவன், மிக விரைவில் இருப்பதை யிழக்க நேரிடும். வினையே ஆடவர்க்கு உயிர்' என்னுங் கோட்பாட்டை மனத்திற் கொண்டு முயலும் ஒருவன் பெற்றுள்ள செல்வங் குறையாது; மேலும் வளர்ந்து கொண்டே வரும். சோம்பித் திரிவதையே தொழிலாகக் கொண்டால் செல்வம் மாளும்; வறுமை சூழும்; உடலுங் கெடும். உடல் கெடுவதன்றி, உள்ளமுங் கெட்டொழியும்; கெட்டொழிந்த வுள்ளத்தில் தீக்குணங்களே உருவாகும். மீண்டும் எளிதிற் செல்வத்தைப் பெறவும் இன்பத்தை நுகரவும் கெடு வழிகளிற் செல்லவும் அம் மனம் நாடும். அவற்றைப் பெறாவழி மனங்கலங்கி மயங்கும். முயற்சியுடையவனாக இருப்பின் இழப்புக்கு மனங் கலங்கான். முயன்றால் அவற்றைப் பெற்று விடலாம் என்ற மனத்துணி வால் நிலைகலங்க மாட்டான். ஒரு செயலைச் செய்து வெற்றி காண விழையும் ஒருவன் இடைவிடாது முயலவேண்டும்; சிறிது சோம்பினாலும் தளர்ந்தாலும் வெற்றி காண்பதரிது. சோம்பலுடையவனை எப்பொழுதும் உறக்கம் சுற்றிக் கொண்டேயிருக்கும். உறக்கத்தை உற்ற துணையாகப் பெற்றுள்ள அவனை, மறதி மறவாது பின் தொடரும். மறதியாற் பீடிக்கப்பட்டவன், நினைத்ததைச் செய்யமாட்டாமல் காலங் கடத்திக்கொண்டே خمی