பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(18. - அன்புள்ள இளவரசனுக்கு ...! செய்யும் பெரிய தீங்காகும். உன் தாய் மொழிக்குத் தீங்கு செய்யாதே. இரண்டு திங்களாக உனக்கு அறிவுரைகள் எழுதாமலேயே கடிதங்கள் எழுதி விட்டேன், அலுவல் மிகுதியால், இன்று ஒய்வு கிடைத்தமையால் மீண்டும் சில அறிவுரைகள் எழுதுகின்றேன். நான் எழுதுவது வெறும் "உபதேசமாக”ப் போய்விடக் கூடாது. உன் வாழ்வில் அவற்றைக் கட்ைப்பிடித்து ஒழுகல் வேண்டும். ஏனெனில் நீ எப்பொழுதும் மாணவன் அல்ல'வருங்காலத்தில் இந்நாட்டுக் குடிமக்களில் ஒருவன். நீ ஒழுக்கமுடையவனாக இருந்தால் உன் நாடும் நல்ல நாடாகும். எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற ஒளவைப் பாட்டியின் பாட்டின் கருத்தை உனக்கு முன்னரே விளக்கிக் கூறியிருக்கிறேன் அல்லவா? நீநினைக்கலாம் நான் மட்டும் நல்லவன் ஆனால் போதுமா ? மாணவர் அனைவரும் அல்லவா ஒழுக்க முடையவராதல் வேண்டும் என்று, ஆம் அனைவரும் நல்லவராதல் வேண்டும் என்பதே என் அவா. அனைவரும் நல்லவராதல் வேண்டும் என்பதற்கு ஆசிரியர்களை மட்டும் நம்பிக் கொண்டு, பெற்றோர் வாளாவிருத்தல் கூடாது. அத்தனை மாணவர்களையும் ஒருவரே திருத்தல் இயலாது. அதனால் ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் பிள்ளைகளைத் திருத்த முற்பட வேண்டும். பெற்றோர் ஒவ்வொருவரும் வீட்டில் ஆசிரியராதல் வேண்டும். அப்பொழுது தான் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆதலின்