பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... | அம் மாநாட்டில் உரையாற்றிய பெருமக்கள், ஆங்கில மொழியின் சிறப்பையும், அஃது, உலகுக்குச் செய்த நன்மைகளையும், நமக்கு அதன் இன்றியமையாத் தேவை யையும் கூறி, அதனால் கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் எழுதியிருக்கிறாய். மேலும், அது பற்றி என் கருத்தையும் எழுதுமாறு குறிப்பிட்டிருக்கிறாய். அங்குப் பேசியவர்கள் அனைவரும் பேரறிவாளர்கள். கல்வியைப் பற்றிக் கருத்துரைக்கும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் கூறியவை அனைத்தும் உண்மையே. தமிழ் மக்கள் எம்மொழியையும் வெறுப்பவரல்லர் வேண்டி விரும்பியேற்றுக் கற்றுத் தெளிந்து 2 மகிழும் இயல்பினர் என்றி உண்மையை அவர்தம் பேச்சு உறுதிப் படுத்துகிறது. ஆயினும், ஆங்கிலம் இனியும் பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதுதானா ? அது நமக்கு எந்த அளவுக்குத் தேவை? என்ற வினாக்கள் வரும்பொழுது தான் கருத்து வேறுபடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. நாம் இப்பொழுது அடிமை நாட்டிலே வாழவில்லை. உரிமை பெற்ற நாட்டிலே வாழ்கிறோம். அவ்வாறாயின் மொழிக்கும் விடுதலை வேண்டும். நம்மை நாமே ஆண்டு கொண்டிருக்கிறோம்; இன்னொருவர் நம்மை ஆளவில்லை. அதுபோலவே நம் மொழியையும் மற்றொரு மொழி ஆள்வது கூடாது. மொழிக்கும் உரிமை - விடுதலை கிடைத்துவிட்ட தென்றால் தமிழ்மொழி எங்குஞ் செல்வதற்கு உரிமை பெற்றிருக்க வேண்டும்; எந்தத் துறையிலும் ஆட்சி