உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அன்புள்ள பாண்டியனுக்கு... நாட்டை யாராண்டாலென்ன என்ற மனப்போக்கில் வாழ்தல் கூடாது. நாமே ஆள்கின்றோம்; நமக்காக ஆள்கின்றோம்; நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் துணை கொண்டு ஆள்கின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். அவ்வுணர்ச்சியுடன் நாம், அலுவலாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அலுவலாளர், ஆள்வோருடன் ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறே ஆள்வோர், அலுவலாள ருடனும், அலுவலாளர் நம்முடனும் ஒத்துழைக்க வேண்டும். இம்மூவரும் ஒருவர்க்கொருவர் அன்புளத்தோடு ஒத்து ழைக்க வேண்டு மென்பதைக் கடமையுணர்வாகக் கொள்ள வேண்டும். அக்கடமை யுணர்வு நாட்டு நலத்திற்காகவே என்று உறுதி பூண வேண்டும். இவ்வுறுதி, கடமை, ஒத்துழைப்பு என்பன துளியும் இல்லாமல் இருப்போர் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்கின்றனர் என்ற அளவிற்றான் மதிக்கப்படுவர். நம் வீட்டில் நாய், பூனை, பசு முதலியவற்றை வளர்க்கின்றோமே அவற்றிற்கெல்லாம் நாட்டைப் பற்றிய எண்ணங் கடுகளவேனுந் தோன்றுவதுண்டோ ? அவற்றைப் போலவே நாமும் சிந்தனை யற்றிருந்து விட்டால், நமக்கு நாடெதற்கு ? விடுதலை எதற்கு ? குடியரசுதான் எதற்கு ? இவையனைத்தும் வேண்டுமெனில் நாட்டுக்கும் நமக்குமுள்ள தொடர்பை எண்ணிப் பார்க்க வேண்டு மல்லவா ? அவ்வாறு நினைத்து பார்க்கும் நாடுகளில் மட்டுந்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரு பிரிவினரும் போட்டியிட்டுக் கொண்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்வதைக் காண முடிகிறது. அத்தொடர்பை எண் ணிப் பாராத நாட்டில் தன்னலம் மேலோங்கி நிற்கு மே தவிர, நாட்டு நலம் காணப்பட மாட்டாது.