உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - _ - T கவியரசர் முடியரசன் -- - - - - --- - - -- இனி, நாட்டுக்குப் பொதுவானவர்களாக நாட்டின் சொத்தாகக் கருதப்படும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், எழுத்தாளர் போன்ற பெருமக்கள்; தத்தம் நெஞ்சங்களிலே கை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நாம் அடைந்த தந்நலம் எவ்வளவு? புரிந்த பொதுநலம் எவ்வளவு? இரண்டிலும் பொதுநலம் விஞ்சியிருக் கின்றதா ? இல்லையானால் வரும் ஆண்டில் பொதுநலம் விஞ்சச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள், நாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டவர்கள். அதனால் இவர் தம் பணியில் பொதுநலமே விஞ்சியிருக் க வேண்டும். இப்பெருமக்கள் நலனில் அரசு, தானே அக்கறை காட்டவேண்டும். இப்படித்தான் தாயகத்தைக் காக்க வேண்டும், அப்பொழுதுதான் காக்கமுடியும். இவ்வாறு ஒவ்வொரு குடிமகனும் எண்ணி ஒழுகினால், துள்ளி வரும் பகையைத் து வென்றுமிழ்ந்து, தள்ளிவிடும் மனநிலையைப் பெற்றவராய்த் தாயகத்தைக் காத்துநிற்கும் தறுகண்மை உற்றவராய் நாம் வாழ்ந்து, நானிலம் போற்ற வளர்ந்து நிற்போம். வாழ்க தாயகம் வெல்க தாயகம்! "தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை o மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?" o - பாரதியார். இங்ங்னம், அறிவுடை நம்பி