பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி மறவேல் o ੇ ਾਂ ੁ -- == அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். நாட்டுப் பற்றென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்; அரசியலில் ஈடுபட்ட வர்க்குத்தான் அப்பற்று வேண்டுவது என இதுவரை எண்ணியிருந் தேன்; உங்கள் கடிதத்தைப் படித்த பிறகே உண்மையை உணர்ந்து கொண்டேன். மேலும் நாட்டுப் பற்றுடையார், எவ்வெவ்வாறு செயற்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்’ என்றெழுதியிருக்கிறாய். நாட்டுப் பற்றைப் பற்றி மக்களிடையே நன்கு விளக்கிக் கூறாமை யாற்றான், விடுதலை பெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இந்நிலையில் இருக்கின்றோம். அரசியலில் ஈடுபட்டவர்க்கு மட்டுந்தான் நாட்டைப் பற்றிய அக்கறை இருக்கவேண்டும் என்ற தவறான எண்ணம், நம்மிடையே இருந்து வருவதால் பெருந்தீங்குகள் நேர்ந்து விடுகின்றன. நாம் வேறு நாடு வேறு என்று எண்ணி விடுதல் கூடாது. நாடென்பது வெறும் பூகோளப் படம் அன்று; அங்கு வாழும் மக்களின்