பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் 215 - SiSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - உணர்ச்சித் தொகுப்பு என்று அறிஞர் கூறியிருப்பது இங்கு நினைவிற் கொள்ளத் தக்கது. பள்ளியிற் பயிலும் மாணவர்க்கும் நாட்டுப் பற்று வேண்டும். அவர்தம் நிலைக்கேற்பச் செயல்முறைகளில் ஒழுகுவதுதான் நாட்டுப்பற்றாகும். எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டு வரைகின்றேன். முதலில் மாணவர் தாம் பயிலும் பள்ளியில் பற்றுடையவராக விளங்கவேண்டும். பள்ளிச் சுவர்களைக் கண்டபடி எழுதிப் பாழ்படுத்துதல் கூடாது; வகுப்பறைகளிலுள்ள தடுப்புப் பலகைகளையும் தட்டிகளையும் தகர்ப்பதும் சிதைப்பதுங் கூடாது; இருப்புப் பலகைகளின் உறுப்புகளை உடைத்துத் துண்டு துண்டாக ஒழித்துக் கட்டுவதுங் கூடாது, தெருவழியில் நிற்கும் விளக்குக் கம்பங்களையும், ஒளிவிளக்கு களையும் குறிபார்த் தெறிந்து விளையாடும் வீர விளையாட்டும் வேண்டப் படுவதன்று. இத்தகைய பொதுச் சொத்துக்களை நாட்டுடைமைகளைப் பாழ்படுத்தும் செயல்களை அறவே விட்டொழிக்க வேண்டும். இவற்றையெல்லாம் ஊறுபடுத்து வதால் யாருக்கோ நட்டமென்று எண்ணுதல் தவறு. நமக்குத்தான் இழப்பு: நாட்டுக்குத்தான் இழப்பு. நாட்டுடைமை ஒவ்வொன்றிலும் நம் பங்கும் சேர்ந்திருக்கிறது. அதனால் அவை நமக்கும் உரிமையாகின்றன. நம்முரிமைப் பொருள்களை நாமே பாழ்படுத்தலாமா ? இவ்வாறு நினைந்து நல்வழியில் ஒழுகுவதுதான் மாணவர்க்குரிய நாட்டுப் பற்றாகும். இவ்வாறே நீ நடந்து வருவாயென்று நம்புகின்றேன். இது நிற்க.