பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T- -T'. - - T —.


-— அன்புள்ள பாண்டியனுக்கு... .

நீ நோய்வாய்ப்பட்டதாகவும், அப்பொழுது அந்நகர்த் திருக்குறட் கழகத் தலைவர் உனக்குப் பேருதவி புரிந்த தாகவும், மருந்து, பழம் முதலியன வாங்கி யுதவியதாகவும், அவற்றிற்குப் பணம் தந்தபொழுது அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் எழுதியிருந்தாய். அவர், திருக்குறட் கழகத்துக்குத் தலைவராக இருப்பதற்குத் தகுதியுடையவர் என்பதை மெய்ப்பித்துவிட்டார். அவர் அன்புள்ளம் வாழ்க. அப் பெருமகனாரின் இத்தகைய அன்பைப் பெறும் வகையில் நீயும் நடந்து கொண்டிருக்கிறாய் என்பதறிந்து அளப்பிலா மகிழ்ச்சியுற்றேன். அவர் செய்த நன்றியை என்றும் மறத்தல் கூடாது. நீ அவருக்கு நன்றி சொல்லி யிருப்பாய். அஃது எனக்கு நன்கு தெரியும். ஒருவர் செய்த உதவிக்கு நன்றி சொல்வதோடு நமது கடமை முடிந்து விடாது; அதனை மறவாது என்றும் மனத்தில் நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமது பண்பாடு. அதனாற்றான் செய்ந்நன்றி சொல்லுதல் என்று கூறாது, செய்ந்நன்றி)யறிதல் என நம் முன்னோர் தெளிவாகக் கூறியுள்ளனர். அறிதல் என்றால் மறவாது என்றும் நினைந்தி ருப்பதாகும். நம் பண்பாட்டிற்கேற்ப நீயும் அவர் செய்த நன்றியை மறவாது, என்றும் நினைவுகூர்தல் வேண்டும். அவர் ೧gಘೀTಖಕ್ಹ செய்த உதவியாகும். அது சிறியதாயினும் உலகத்தைவிடப் பெரியதாகக் கருதப்பட வேண்டும். எங்களை விட்டுப் பிரிந்து தனித் திருக்கும் உனக்கு, நோய் வந்த காலத்துப் பல்வகையாலும் உதவி யிருக்கின்றார்; உதவுவது நம் கடமை என்ற எண்ணத்துடன்